Lyrics

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் நான் காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
Writer(s): Kannadhasan, K V Mahadevan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out