Lyrics

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான் தான் பாத்ததில்லே அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லே ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான் தான் பாத்ததில்லே அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லே அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ? ஏழைகள் திருடுறது எப்போதும் பார்வையில் படுகிறது ஏழைகள் திருடுறது எப்போதும் பார்வையில் படுகிறது படிச்சவன் திருட்டு பதவியில் இருக்கு யார் அதை கேட்கிறது? பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான் இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான் தான் பாத்ததில்லே அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லே ஓட்டுக்கு வருவாங்க அப்போ வார்த்தையை விடுவாங்க காரியம் ஆனா கோட்டைக்கு போனா குடுசைய மறப்பாங்க பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான் இல்லாதவன் இங்கே திண்டாடுறான் பாயுது பண திமிரு அன்றாடம் பண்ணுது பல தவறு பூனைக்கு நான் தான் மணி கட்ட போறேன் பாருங்க பொறுத்திருந்து பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான் இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான் தான் பாத்ததில்லே அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லே அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ?
Writer(s): Shankar Ganesh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out