Lyrics

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?? துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?? அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்? நானாட வில்லையம்மா சதையாடுது அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது நானாட வில்லையம்மா சதையாடுது அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது பூவாக வைத்திருந்தேன் மனமென்பது அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out