Lyrics

சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள் வண்ணக் கொடியிடை மெல்ல ஒடித்தவள் என்னென்னமோ சொல்லத் துடிக்கிறாள் சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் ஆஹா-ஆஹா-ஆஹா சின்னக் கண்ணன் என்ன நினைக்கிறான் கண்ணம் குழியவே சிரிக்கிறான் சித்திர மேனியை தொட்டுத் தடவிட ஏனோ இப்படி துடிக்கிறான் சின்னக் கண்ணன் என்ன நினைக்கிறான் ஆஹா-ஆஹா-ஆஹா கை வளையலுக்கெல்லாம் நான் முத்தம் தரவேண்டும் அ-அ-ஆ ஆ-ஆ-அ-ஆ குழல் மலர்களுக்கெல்லாம் தேன் முத்தம் தரவேண்டும் உடல் அணைக்கும் உடைகளுக்கும் முத்தம் தரவேண்டும் உனை படைத்த இறைவனுக்கும் முத்தம் தரவேண்டும் ஆ-ஆ சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள் வண்ணக் கொடியிடை மெல்ல ஒடித்தவள் என்னென்னமோ சொல்லத் துடிக்கிறாள் சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் ஆஹா-ஆஹா-ஆஹா அந்த முத்தங்களுக்கெல்லாம் என்ன விலை தரவேண்டும் அ-அ-ஆ ஆ-ஆ-அ-ஆ இதழ் சுவைகளை எல்லாம் இந்தச் சிலை பெறவேண்டும் பனிமலர் போலே குளிர்ந்திட வேண்டும் கைவிரல் தொட்டு காதல் மொட்டு மலர்ந்திட வேண்டும் சின்னக் கண்ணன் என்ன நினைக்கிறான் கண்ணம் குழியவே சிரிக்கிறான் சித்திர மேனியை தொட்டுத் தடவிட ஏனோ இப்படி துடிக்கிறான் சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள் வண்ணக் கொடியிடை மெல்ல ஒடித்தவள் என்னென்னமோ சொல்லத் துடிக்கிறாள் லல்லல்ல-லல்லல்ல-லல்லல்லல்-லா லாலல்ல-லல்லல்ல-லாலல்ல-லா லாலல்ல-லல்லல்ல-லால-லால-லல்ல லாலல்ல-லால-லால-லா
Writer(s): Vaalee, Veda Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out