Lyrics

நீர்க்குமிழோ (நீர்க்குமிழோ) நெடுங்கனவோ (நெடுங்கனவோ) தீயினில் வீழும் பொன்தூறல் இவ்வாழ்வோ ஏன் பிரிவோ? (ஏன் பிரிவோ?) எது முடிவோ? (எது முடிவோ?) நீரினில் மூழ்கும் மண் பொம்மைகள் நாமோ ஓசை இல்லாமல் உறவும் இல்லாமல் ஊமை என் நெஞ்சின் தாலாட்டும் நீயோ தூதும் இல்லாமல் தனிமை தாங்காமல் கூண்டுக்குள் மூச்சு விடும் தென்றல் நீயோ தீராத காற்றில் உனை மாறாத நேற்றில் அடைத்தேனே துடித்தேனே அழகே-ஓ-ஓ-ஓ மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில் அலைந்தேனே குமைந்தேனே உயிரே-ஓ-ஓ-ஓ-ஓ ஆ-ஆ உ-உ-உ-உ அ-உ-உ-எ-எ ஓ-ஓ-ஓ யார் வலையோ? (யார் வலையோ?) எவர் இரையோ? (எவர் இரையோ?) இரைச்சலின் உள்ளாடும் பாடல்கள் நாமோ யார் பிழையோ? (யார் பிழையோ?) எது சரியோ (எது சரியோ?) கானலின் நீருக்குள் விண்மீன்கள் நாமோ வானம் செல்ல நீயும் கேட்டாயே அன்பெனும் தூண்டில் தனில் நான் உன்னை மாட்டி வைத்தேன் விடுதலை கேட்கிறாய் வலியுடன் பார்க்கிறாய் எதை எதை நான் நான் செய்ய தீராத காற்றில் (தீராத காற்றில்) உனை மாறாத நேற்றில் (மாறாத) அடைத்தேனே துடித்தேனே (துடித்தேனே) அழகே-ஓ-ஓ-ஓ மாயாதா நோக்கில் (மாயாத நோக்கில்) புயல் ஓயாத போக்கில் (மாயாத நோக்கில்) அலைந்தேனே குமைந்தேனே உயிரே-ஓ-ஓ-ஓ பேர் இசையே (உ-ஓ) பெரு நிலையே ஈரங்கள் காயாத ஏகாந்தம் நீயே (ஏ-ஏ) மீமிசையே மிகுமதியே (ஆ-அ) மார்பினில் மாறாத வாசங்கள் நீயே பேர் இசையே (பேர் இசையே) பெரு நிலையே (பெரு நிலையே) ஈரங்கள் காயாத (ஈரங்கள் காயாத) ஏகாந்தம் நீயே (ஏகாந்தம் நீயே) மீமிசையே (மீமிசையே) மிகுமதியே (மிகுமதியே) மார்பினில் மாறாத (மார்பினில் மாறாத) வாசங்கள் நீயே (வாசங்கள் நீயே) கார் இருள் மேலே விழும் சீரொளி நீயே உணர்ந்தேனே உணர்ந்தேனே உயிரே-ஓ-ஓ
Writer(s): Girishh Gopalakrishnan, Karthik Netha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out