Lyrics

ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன் என்னவோ என்னவோ தவமா நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன் கால்களின் விரல்களே கொலுசா பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி... இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல் நாட்டியமா ஹேய் நாட்டியமா தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள் மறக்குமா மறக்குமா நெஞ்சே மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும் கரையுமா கரையுமா கண்ணில் ஹைதர் கால வீரந்தான் குதிரை ஏறி வருவானோ காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன் யாரவனோ யாரவனோ ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ
Writer(s): Luther Dixon, Robert Taylor, Robert Mosely Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out