Lyrics

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ மடி மேலே ஆடும் பூந்தேரோ அன்னை மனம் தான் பாடும் ஆராரோ ஓ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ தென் மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னை கண்டு திரு தோளில் மாலை சூடும் மகராணி யாரோ இங்கு ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு பணிவாய் மலரே மடிமேல் உறங்கு மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் கிள்ளை ஒன்று உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ காமாட்சி கோயில் கண்டு சூடர் வீசும் தெய்வம் ஒன்று எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம் விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம் உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது பணிவாய் மலரே மடிமேல் உறங்கு மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ மடிமேலே ஆடும் பூந்தேரோ அன்னை மனம் தான் பாடும் ஆராரோ ஓ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out